Wednesday, November 19, 2025

SangapPulavargal Pasurams

Sri:
சங்கப்புலவர்கள்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
On Mom's house - ( Link to முக்தனுக்கு ஸம்ஸாரம் போலே இவளுக்கு பிறந்தகம், on Sita & Nappinnai)

இராமழை பெய்த ஈரல் ஈரத்துள்
பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி
வெள்ளி விரைத்துப் பொன்னே விளையினும்
வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே 
செங்கேழ் வரகு பசுங்கதிர் கொய்து
கன்று காத்துக் குன்றில் உணக்கி
ஊடுபதர் போக்கிமுன் உதவினோர்க்கு குதவிக்
காடுகழி இந்தனம் பாடுபார்த் தெடுத்துக்
குப்பைக் கீரை உப்பின்றி வெந்ததை
இரவல் தாலம் பரிவுடன் வாங்கிச்
சோறது கொண்டு பீறல் அடைத்தே
ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும்
நன்றே தோழிநம் கணவன் வாழ்வே." - 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

On Nammazhwar 
ஈய் ஆடுவதோ கருடற்கு எதிரே
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறு வெம் புலி முன்
நரி கேசரி முன் நடையாடுவதோ
பேயாடுவதோ அழகு ஊர்வசி முன்
பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந்து
ஓவாது உரை ஆயிரம் மா மறையின்
ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே–சங்கப்புலவர்கள்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
On Nammazhwar
சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பராங்குசனோ நாரணனோ தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு –சங்கப்புலவர்கள்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


No comments:

Post a Comment