Tuesday, December 12, 2023

Kamba Ramayanam by Kamban

ஸ்ரீ:
கம்ப ராமாயணம் - கம்பன்  
Selective Pasurams from 
Kambha Ramayanam by Kamban

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கம்ப ராமாயணத்தில் மிதிலைக் கொடிகளின் தோற்றம்
480. மை அறு மலரின் நீங்கி
   யான் செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!         (480)
     (பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம்)

481. நிரம்பிய மாடத்து உம்பர்
   நிரை மணிக் கொடிகள் எல்லாம்
தரம் பிறர் இன்மை உன்னி
   தருமமே தூது செல்ல
வரம்பு இல் பேர் அழகினாளை
   மணம் செய்வான் வருகின்றான் என்று
அரம்பையர் விசும்பின் ஆடும்
   ஆடலின் ஆடக் கண்டார்.                  (481)
(பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம்)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பணிந்த இராமலக்குவரைத் தயரதன் தழுவுதல் 

1050.   காவியும். குவளையும். கடி கொள் காயாவும் ஒத்து.
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே.
தேவரும் தொழு கழல் சிறுவன். முன் பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து. அரசன்மாடு அணுகினான்.
மிதிலை வந்தடைந்த தசரதனை, ஜனகன் வரவேற்கும் இடத்தில கம்பன் அருளும் பாசுரம். தன்தாள் பணிந்த இராம லக்ஷமணர்களை  தசரதன் தழுவி கூறும் பாசுரம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கைகேயியினிடம் இராமன் விடை கொள்ளுதல்
1604. ‘மன்னவன் பணி அன்றாகின்,
     நும் பணி மறுப்பெனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம்
     அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்?
     இப் பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே
     போகின்றேன்; விடையும் கொண்டேன்.’
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

வாலி வதை படலத்தில் பாசுரம் 

4020. 'கோ இயல் தருமம், உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை,
திகைத்தனை போலும், செய்கை!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

மீட்சி படலம்
10189. 'அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்; 
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால், 
உய்யுமே, அவன்?' என்று உரைத்து, உள் புகா, 
(கையினால்)கய்யினால் எரியைக் கரி ஆக்கினான். 

ராமன் வரவில்லை என்றால் தீயில் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும் என்று பரதன்  தீர்மானித்தான் என்று கம்பர் பாடியுள்ளார். தக்க சமயத்தில் வாயு புத்திரனான அனுமான் அங்கு வந்ததை,  "கையினால் எரியை கரி ஆக்கினான்" என்று அனுமான் பரதன் வளர்த்த தீயைக் கையால் தேய்த்து கரியாக்கினான் என்று கம்பன் பாடியுள்ளார்.  
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment