Monday, April 26, 2021

Sri Godha Chatusloki - Stotram on Andal by by Thirumalai Sri Ananthazhwan & Goda Mangalam

 ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமி அருளிச் செய்த

"||:  ஸ்ரீ கோதா சது:ச்லோகி  :||"

🔷🔶 ஸ்ரீ அனந்தாழ்வான் தனியன் 🔷🔶

சக்ரே கோதா சதுஶ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம் |
ஸ்ரீ வேங்கடேஶ சத்பக்தம் தம நந்தகுரும் பஜே ||
चक्रे गोधा चतु श्लोकीं  यो वेदार्थ प्रकर्पितम् |
श्री वेङ्कटेश सद्भक्तं तं अनन्त गुरुं भजे  ||

[ வேதப்பொருள்களைத் தன்னுள் கொண்ட "கோதா சதுஸ்லோகி" என்னும் துதியை  அருளிச்செய்த குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன் ]

🔶 (ச்லோகம் 1)
नित्या भूषा निगम शिरसां निःसमोत्तुङ्ग वार्ता
कान्तो यस्याः कचविलुलितैः कामुको माल्य रत्नैः ।
सूक्त्या यस्याः श्रुति सुभगया सुप्रभाता धरित्री
सैषा देवी सकलजननी सिञ्चतां मामपाङ्गैः ॥ 1॥

🔷 [ [ எந்த நாச்சியாரது இணையற்ற மேலான அருளிச்செயலானது (திருப்பாவை) வேதத்தின் உச்சியான வேதாந்தத்திற்கு  நித்யபூஷணமாய் ஆகிறதோ, எந்த நாச்சியாரது காதலன் (பரந்தாமன்) அவள் குழலினின்று களைந்த அழகிய பூமாலையில் மிக்க ஆசையுடையவனாயுள்ளானோ, எந்த நாச்சியாரின் ச்ருதிகள் போன்ற போன்ற மங்களமான திருவாக்கிலே பூமி நல்லவிடிவாகிறதோ அப்படிப்பட்ட லோகமாதாவான இந்த கோதா நாச்சியார் அடியேனைத் தமது கடாக்ஷமாகிற அமுத மழையால் நனையச்செய்ய வேண்டும். ]

🔶 (ச்லோகம் 2)
माता चेत्तुलसी पिता यदि तव श्रीविष्णुचित्तो महान्
भ्राता चेत् यतिशेखरः प्रियतमः श्रीरङ्गधामा यदि ।
ज्ञातारस्तनयास्त्वदुक्ति सरस स्तन्येन संवर्धिता
गोदादेवि! कथं त्वं अन्यसुलभा साधारणा श्रीरसि ॥ 2

🔷 [ ஶ்ரீகோதா தேவியே!  உனது தாய் துளசிச் செடியாகும். உனது தந்தை ஆழ்வாராகிய ஶ்ரீவிஷ்ணுசித்தர் ஆவார். உனது அண்ணனோ யதிராஜராகிய ஶ்ரீராமாநுஜர் ஆவார். உனக்கு மிகவும் பிரியமானவர் ஶ்ரீரங்கநாதர் ஆவார். உனது பிள்ளைகள் உனது வாய் சொல் (ஶ்ரீகோதை அன்னையின் பாசுரங்கள்) அமுதத்தையே முலைப் பாலாக பருகி வளர்ந்த ஞானவான்கள். அன்னையே! நீ எங்ஙனம் சாமான்யமான ஜனங்களுக்கு கிட்ட தகுந்த நிதியாக ஆவாய்? ]

🔶 (ச்லோகம் 3)
कल्पादौ हरिणा स्वयं जनहितं कृष्णेन सर्वात्मनां 
प्रोक्तं स्वस्य च कीर्तनं प्रपदनं स्वस्मै प्रसूनार्पणम् ।
सर्वेषां प्रकटं विधातुमनिशं श्रीधन्विनव्ये पुरे
जातां वैदिक विष्णुचित्त तनयां गोदां  उदारां स्तुमः ॥ 3॥

🔷 [ கல்பத்தின் ஆதியில்  பகவானால் உலகில்லோர்கள் யாவருடைய உஜ்ஜீவனத்தை  மனதிற் கொண்டு தன்னையேத்திப் பாடுதல், ஆச்ரயித்தல், பூவிட்டு அர்ச்சித்தல் சொல்லப்பட்டது கேட்ட பூமிப் பிராட்டி  இவற்றை உலக மக்கள் யாவரும்  எப்போதும் அறியும்படி செய்வதற்காக ஶ்ரீவில்லிபுத்தூரிலே பரம வைதிகரான ஶ்ரீவிஷ்ணு சித்தரான பெரியாழ்வார் திருமகளாக வந்து பிறந்த பரம உதாரகுணமுடைய ஶ்ரீகோதா தேவியை நமஸ்கரிக்கிறேன்.]

🔶 (ச்லோகம் 4)
आकूतस्य परिष्क्रियां अनुपमां आसेचनं चक्षुषोः
आनन्दस्य  परम्परां अनुगुणां आरामशैलेशितुः ।
तद्दोर्मध्य  किरीट कोटि घटित स्वोच्छिष्ट कस्तूरिका
माल्यामोद समेधितात्म विभवां गोदां उदारांस्तुमः ॥ 4॥

🔷 [ சோலைமலை மணாளனுடைய அபிப்ராயம் நிறைந்த செயல்களுக்கு இணையற்ற அழகூட்டு மவளாயும், காணும் கண்களுக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டுபண்ணுமவளாணும், அவனுக்கு எவ்விதத்திலும் தக்கவளாய், நிரந்தர ஆனந்த வெள்ளமூட்டும்படி, அவன் நன்மார்பின் மேலும், சுடர்முடி மேலும், தான் சூடிக்களைந்த கஸ்தூரி, பூமாலைகளின் பெருகும் நன்மணத்தினால், அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்யும் கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்.]

{குறிப்பு:− திருமாலிருஞ்சோலை, திருவேங்கட மலை என இரண்டையும் "ஆராமசைலம்" என்றும் கூறுவர்}

🔶
(திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஸ்ரீ கோதா சது:ச்லோகி முற்றிற்று) 🔶

கோதா மங்களம்:

स्वोच्छिष्टमालिकाबन्ध गन्धबन्धुरजिष्णवे 
विष्णुचित्त तनुजायै गोदायै नित्य मङ्गलम् ॥ १ ॥

பொருள்‌: தான்‌ சூடிக்களைந்த பூமாலைகளினால்‌ எம்பெருமானை மகிழப்பண்ணும்‌ பெரும்புகழ்‌ படைத்த ஆழ்வார்‌ திருமகள்‌ கோதை நாச்சியாருக்கு நித்யமங்களம்‌. 

मादृशाकिञ्चनत्राण बद्धकङ्कण पाणये
विष्णुचित्त तनुजायै गोदायै नित्य मङ्गलम् ॥ २ ॥

பொருள்‌: நம்போன்ற புகலற்றமாந்தரை ரக்ஷிப்பதில்‌ மாறா வ்ரதம்‌ பூண்டுள்ள பெரியாழ்வார்‌ பெண்‌ பிள்ளையான ஸ்ரீ ஆண்டாளுக்கு நித்யமங்களம்‌. 

श्रीमत्यै विष्णुचित्तार्य मनोनन्दनहेतवे
नन्दनन्दन सुन्दर्यै  गोदायै नित्य मङ्गलम् ॥ ३ ॥

பொருள்‌: ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வாரின்‌ மனமகிழ்ச்சிக்குக்‌ காரணமாகவும்‌ கண்ணபிரானுக்கு இன்பம்‌ விளைவிக்கும் அழகியுமான கோதைபிராட்டிக்கு நித்யமங்களம்‌. 

कर्कटे पूर्वफल्गुन्यां तुलसीकाननोद्भवाम्
पाण्ड्ये विश्वम्भरां  गोदां वन्दे श्रीरङ्गनायकीम् ॥ ४ ॥
 

பட்டர்பிரான் கோதை திருவடிகளே சரணம்

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம: 

--------------------------------------------------------------------------
ஒரு நாள் அனந்தாழ்வாருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளைச் சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார். அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார். “ஏதாவது தொலைத்து விட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள்.  “இல்லை. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றாராம். ஆண்டாள் வாழ்ந்த காலம் என்ன?, அனந்தாழ்வார் வாழ்ந்த காலம் என்ன? பக்திக்கு பிரேமம்தான் முக்கியம். காலம் கடந்த பக்தி! அனந்தாழ்வார் நம் அன்னை கோதை ஸ்ரீஆண்டாள் மீது "கோதா சதுஸ்லோகி" இயற்றியுள்ளார். அனந்தாழ்வான் திருமலையில் உள்ள நந்தவனத்து மகிழ மரத்தடியில், ஓர் "திருவாடிப்பூரத்தன்று" பரமபதித்தார் என குருபரம்பரைக் கதை கூறுகிறது.

--------------------------------------------------------------------------

No comments:

Post a Comment