श्रीमते रामानुजाय नमः ॥
🔷🔶
श्रीरामानुजचतुःश्लोकी
||: ஸ்ரீ ராமாநுஜ சது:ச்லோகி :||
🔷🔶
🔶 (ச்லோகம் 1)
अनिशं भजतामनन्यभाजां चरणाम्भोरुहमादरेण पुंसाम् ।
वितरन्निभृतं विभूतिमिष्टां जय रामानुज रङ्गधाम्नि नित्यम् ॥ १॥
அநிஶம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம் |விதரந் நியதம் விபூதி மிஷ்டாம் ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் ||
🔷 [ ஶ்ரீஉடையவரே! தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர் விஷயீ பவ ஸ்ரீ ராமாநுஜ! ]
🔶 (ச்லோகம் 2)
भुवि नो विमतांस्त्वदीयसूक्तिः
कुलिशीभूयः कुदृष्टिभिस्समेतान् ।
शकलीकुरुते विपश्चिदीड्या
जय रामानुज शेषशैलशृङ्गे ॥ २॥
புவி நோ விமதாம்ஸ்த்வதீய ஸூக்தி:குலிஷீ பூய குத்ருஷ்டி பிஸ்ஸமேதாந் |
ஷகலீகுருதே விபக்ஷ்வி தீட்யா
ஜய ராமாநுஜ ஷேஷ ஷைல ஸ்ருங்கே ||
🔷 [(அப்பனுக்கு சங்காழி அளித்தவரே!) தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற எதிரிகளை பொடி படுத்த "வேதாந்த சங்க்ரஹம்" தேவரீர் அருளிச் செய்ததால் தேவரீர் திருவேங்கடமா மலையுச்சியில் பல்லாண்டுகள் வெற்றித்திருமகளோடு விளங்குவீராக! விஜயீபவ ஸ்ரீ ராமாநுஜ! ]
🔶 (ச்லோகம் 3)
श्रुतिषु स्मृतिषु प्रमाणतत्त्वं
कृपयाऽऽलोक्य विशुद्धया हि बुद्ध्या ।
अकृथाः स्वत एव भाष्यरत्नं
जय रामानुज हस्तिधाम्नि नित्यम् ॥ ३॥
ஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்க்ருபயாssலோக்ய விஷுத்தயா ஹி புத்த்யா |
அக்ருதா: ஸ்வத ஏவ பாஷ்ய ரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் ||
🔷 [ ஶ்ரீபாஷ்யகாரரே! யதிராசரே! நிர்ஹேதுக கருணையினாலே ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலுள்ள பிரமாணங்களின் உண்மையை குற்றமற்ற மதியினாலே நடுநிலையாக ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தீர். அவ்வாறான தேவரீர்!
ஸ்ரீ ஹஸ்திகிரியில் வெற்றியுடன் "நித்யஸ்ரீ" யாக விளங்க வேணும் ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமாநுஜ! ]
🔶 (ச்லோகம் 4)
जय मायिमतान्धकारभानो
जय बाह्यप्रमुखाटवीकृशानो ।
जय संश्रितसिन्धुशीतभानो
जय रामानुज यादवाद्रिशृङ्गे ॥ ४॥
ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாடவீ க்ருஷா நோ |ஜய ஸம்ஷ்ரித ஸிந்து ஷீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ஷ்ருங்கே ||
🔷 [(ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மண முநியே!) மாயாவாதிகளின் மதமாகிற இருளுக்கு சூரியன் போன்றவரே! பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற காட்டிற்கு நெருப்புப் போன்றவரே! உமது அடியார்களாகிற கடலைப் பூரிக்கச் செய்யும் சந்திரனாயிருப்பவரே! யதிராசரே! திருநாராயணபுரமாகிய (ஶ்ரீபலராமன் ஆண்ட) யாதவாத்ரியில் நித்யஸ்ரீ யை வளரச் செய்து நீடுழி விளங்க வேணும். ஜய விஜயீ பவ ராமாநுஜ! ]
🔷🔶 🔷🔶
रामानुजचतुःश्लोकीं यः पठेन्नियतः सदा ।
प्राप्नुयात् परमां भक्तिं यतिराजपदाब्जयोः ॥
ராமாநுஜ சது: ஷ்லோகீம் ய: படேந்நியத: ஸதா |
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ ||🔷🔶 🔷🔶
🔷[ பல ஸ்ருதி:− இந்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி யை எப்போதும் பாராயணம் செய்பவர்க்கு யதிராசருடைய திருவடிகளில் பரமபக்தி உண்டாகும். ]
इति श्रीरामानुजचतुःश्लोकी समाप्ता ।
|| இதி ஶ்ரீ ராமாநுஜ சது: ச்லோகீம் ஸம்பூர்ணம்||
🔶(திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஶ்ரீ ராமாநுஜ சது: ச்லோகீ முற்றிற்று) 🔶
No comments:
Post a Comment