Sri:
வில்லிபாரதம் குறவர்வில்லிபுத்தூரார் தமிழில் பாடிய மகாபாரதம் ஆகும்.
Go Back duryodhana
துரியோதனன்
துவாரகை நகரத்தினருகில் செல்லும் பொழுது, அந்நகரத்து மதில்களின் மேலுள்ள கொடிகள் காற்றில் இயற்கையில்
பலமுறை அசைதலை, துரியோதனனை நோக்கி "நீ இங்கு வாராதே! திரும்பிச்
செல்!" என்று குறிப்புக் காட்டிக் கைகளால் மறுத்துத் தடுப்பது போன்றதென
வில்லிபுத்துரார் வருணித்தார்.
ஈண்டு நீ வரினும், எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர்தங்கட்கு அல்லால், படைத் துணை ஆகமாட்டான்;
மீண்டு போக! என்று என்று, அந்த வியன் மதில் குடுமிதோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற.
(வில்லி பாரதம் – 2.25.5)
- 108-Articles Tamil-Let's hoist tricolour flag in all our houses Sudha Saaram 87 - வீடுகள்தோறும் மூவர்ண வெற்றிக் கொடி கட்டு-https://sarvamsrikrishnarpanam.blogspot.com/2022/08/HoistTricolorFlagIndependenceDay.html
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
விதுரனே சொல்கிறான்...."கண்ணா, நீ பாற்கடலில் தங்குவாய், ஆதிசேஷனை பாயாகக் கொண்டு தூங்குவாய், ஆல் இலையில் துயில்வாய், வேதங்களில் நீ இருப்பாய், நீ இங்கு வருவதற்கு என் குடிசை என்ன மாதவம் செய்ததோ "
'முன்னமே துயின்றருளிய முது பயோததியோ!
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ!
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
வில்லிபாரதம் - கிருட்டிணன் தூது பாசுரத்தின் மூலம் இந்த நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது.
பார் ஆளக் கன்னன் இகல்
பார்த்தனைமுன் கொன்று அணங்கின்
கார்ஆர் குழல் களைந்து
காலில் தளை பூட்டி
நேராகக் கைபிடித்து
நின்னையும்யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம்
மாபாரதம் (வில்லிபாரதம் – 3-27-33)
அன்பால் இன்று என்னை
அறிந்தே பிணித்தமை நன்று
என் பாதம்-தன்னை இனி
விடுக என்று உரைப்ப
வன்பாரதப்போரில்
வந்தடைந்தேம் ஐவரையும்
நின்பார்வை யால்காக்க
வேண்டும் நெடுமாலே!" (வில்லிபாரதம் – 3-27-37)
- 129-Articles Tamil-Sahadevanin Saagasam Sudha Saaram 88 - சகதேவனின் சாகசம்-https://sarvamsrikrishnarpanam.blogspot.com/2023/02/SahadevansValour.html
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
No comments:
Post a Comment